மாரியம்மா-மாறியம்மா



ஆடி மாதம் பிறக்கிறது அதனால் நாம் மாரியம்மனின் தத்துவம் அறிவோம்.

நம் ஆன்மீகத்தை திருடியவர்களின் புனைவு கதைகளை கேட்டால் நகைப்பு வரும். பரசுராமர் தன் தந்தை சொல் கேட்டு தன் தாயின் தலையை வெட்டிய தாகவும் பிறகு தந்தையிடமே தாயை உயிர்ப்பிக்க வரம் கேட்டதாகவும் அவருடைய அறிவுறுத்தலின் பேரில் தாயை உயிர்ப்பிக்க முயற்சிக்கையில் தாயின் தலையை வேறு உடலுடன் மாற்றி உயிர்பித்ததாகவும் தலையை மாற்றியதால் அவரை "மாறியம்மாவாக" தெய்வமாக கும்பிடுவதாகவும் தொடரும் முட்டாள்களின் கதை.

மாரி, மாறி என்ற வார்த்தைகளில் குழம்பி தவறாய் புனையப்பட்ட கதையை விடுங்கள்.
உண்மையை ஆய்வோம்.

மாரி+அம்மா = மாரியம்மா

மாரி என்றால் மழை.  மழைக்கான கடவுள் மாரியம்மா.

மழைக்கான தெய்வம் மாரியம்மன் என்பதாலேயே ஆடி மாதத்தில் அம்மனை வேண்டி ஆடியை தொடர்ந்து வரும் மாதங்களில் மழை நன்றாக பொழியவேண்டி விவசாயத்துக்கான முன்னேற்பாடுகளை விவசாயிகள் துவங்குகிறார்கள்.

வெயில் உச்சத்தை தொடும் மாதங்களில் அம்மனுக்கு விழா எடுப்பித்து, விழாவின் அங்கமாக ஊரே ஒன்று கூடி கூழ், நீர், மோர், பானகம் முதலிய சூட்டை தணிக்கும் உணவுகளை அம்மனுக்கு பிடித்த உணவு வகை என்று திட்டம் தீட்டி மக்களை தானமாக தரவைத்து  அவர்களுக்குள்ளேயே உதவிக்கொள்ள வைத்த தமிழனின் சமுதாய அறிவு எத்தகையது.

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களை அம்மனின் கோவிலில் தங்க வேண்டும் என்று கட்டளையிட்டு நோய் வந்தவர்களை பிற மக்களிடமிருந்து பிரித்து நோய் ஊரில் பரவாமல் தடுத்தனர்.  கோவிலில் வேண்டுதலாக அம்மனுக்கு இளநீர் முதலான குளிர்சியை அளிக்கும் பழ வகைகளை காணிக்கையாக தரும் வழக்கத்தை உருவாக்கி, அப்படி அம்மனுக்கு தரப்படும் கானிக்கைகளை வைத்தே கோவிலில் தங்கவைக்கப்பட்டிருக்கும் அம்மை நோய்வாய்ப்பட்ட வர்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்தனர்.

காணிக்கையாக செலுத்தப்படும் உப்பை நீரில் கரைத்து கோவில் முழுவதும் தெளித்து நோய் கிருமி பிற பக்தர்களுக்கு பறவாமல் காத்தனர். வேப்பிலையை பயன்படுத்தி நோயின் உக்கிரத்தை குறைத்தனர். மஞ்சளை பயன்படுத்துவன் மூலமும் நோய்க்கிருமி பரவலை தடுத்தனர்.

அம்மன் என்றாலே வெப்பத்தை குறைப்பவளாக உருவகித்து, வெப்பம் சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்குமான மருத்துவ முறையை அம்மனுக்கான வழிபாட்டு முறையாக்கி, மக்களையே அதில் ஈடுபட வைத்து, தன் வியாதிக்கு பிறரிடம் கை ஏந்துகிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வந்து விடாமல், நாம் தான் உதவி செய்து இவர்களை காப்பாற்றினோம் என்ற அகந்தை தானம் தந்தவர்களுக்கும் வந்து விடாமல் அம்மனின் பெயரால் இவற்றையெல்லாம் இயல்பாக நடக்கும்படி செய்து சென்ற நம் தமிழ் மூதாதேயர்களின் சமூக சிந்தனையும், அறிவியல் அறிவும், மருத்துவ அறிவும் முட்டாள்தனமா? மூட நம்பிக்கையா?

சிந்திக்க வேண்டும் தமிழா.

பகுத்தறியவேண்டும் தமிழா.

தொடரும்....

Comments

  1. சிந்தனை தொடரட்டும்...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. பகிர்வுக்கு பாராட்டுகள் அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வினாயகர்

முன்னுறை

பிரம்மம் அறிவோம்