பிரம்மம் அறிவோம்


முந்தய பதிவில் பிள்ளையார் என்ற ஞானம் பற்றி எழுதி இருந்தோம்.  அந்த ஞானத்தை அடிப்படையாக கொண்டு இன்று பிரம்மம் பற்றி ஆராய்வோம்.

பிரம்மா படைத்தலுக்கான கடவுள். அவர் மனைவி கலைவாணி.  பிரம்மாவிற்கு நான்கு தலை. அவருக்கு கோவில் கிடையாது. அதிகாலை வேலை பிரம்ம முகூர்த்தம்.  என்று பிரம்மம் பற்றி கூறப்படுபவை அனைத்தும் பிராணவாயுவை பற்றியதே.

ஆம் பிரம்மம் என்றால் பிராணவாயு (Oxygen).   இப்புவியில் உயிர் வாழ்வது பிராணவாயுவால்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

அதிகாலை வேலை ஏன் பிரம்ம முகூர்த்தம்?

சூரியனின் வெப்பம் இல்லாததால் வளிமண்டலத்தில் உள்ள Oxygen மூலக்கூறுகள் மிகவும் நெருக்கமாக இரவு நேரத்தில் இருக்கும் அதனாலேயே இரவில் குளிர்ச்சியாக இருக்கிறது.  அதிகாலை வேலையில் மெல்ல சூரியனின் வெப்பம் எழும் பொழுது காற்று மெதுவாக விரிவடைய ஆரம்பிக்கும்.  அந்த நேரத்தில் நாம் அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்து பிராணவாயுவை உள்இழுக்கும் பொழுது பகல் நேரத்தில் நாம் ஒருமுறையில் உள்இழுக்கும் அளைவை விட சற்று அதிகமாகவே பிராணவாயுவை உள்இழுத்து கொள்கிறோம்.  அதாவது குறைந்த செயல் செய்து நிறைய இலாபம் அடைகிறோம். இவ்வாறு உள்இழுக்கப்பட்ட பிராணவாயுவை நம் உடலின் அனைத்து செல்களும் பெற்று இருப்பு வைத்து கொள்கின்றன.

உச்சி வெயில் நேரத்தில் Oxygen மூலக்கூறுகள் மிகவும் விரிந்து விலகி இருக்கையில் நமக்கு போதுமான பிராணவாயு கிடைக்காது.  அதுவே நமது உடல் சோர்வடைவதற்கான காரணம். அத்தகைய நேரத்தில் உடலில் பிராணவாயு சேகரித்து வைக்கப்பட்டிருந்தால் சோர்வு என்பதற்கு பேச்சே இல்லை.  அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் தூக்கத்திலிருந்து எழ வேண்டும் என சொல்வது ஏன் என இப்போது புரிகிறதா!

கலைவாணி ஏன் பிரம்மாவின் மனைவி?

ஒருவரது உடலின் செயல்பாட்டிற்கு தேவையான பிராணவாயு சரியான அளவில் சேகரிக்கப்பட்டு இருந்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதனால் உடலின் அனைத்து உறுப்புகளும் மூளை உட்பட சிறப்பாக சுறுசுறுப்பாக வேலை செய்யும்.  சோம்பல் இல்லையெனில் விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கும். விழிப்புணர்வுடன் இருப்பவர் பல கலைகளில் வல்லவராக இருப்பர்.  அதை உணர்த்தவே கலைகளின் அரசி என கலைவாணி பிரம்மத்தின் மனைவியாக்கப்பட்டார்.

காற்று என்பது எல்லா திசையிலும் உள்ளது என்பதற்காகவே பிரம்மத்தை நான்கு தலையுடையவராக உருவகபடுத்தினர் நம் ஆதிதமிழர்.

காற்றை அடைத்து கோவில் கட்டமுடியாது என்பதால்தான் பிரம்மாவிற்கு தனிக்கோவில் வைக்கும் மரபு உருவாக்கப்படவில்லை.

பிரம்மத்தின் அறிவியல் அறிந்தோம்
அதிகாலை எழுவோம்
உயிர்புடன் வாழ்வோம்.

தொடரும்....


Comments

Popular posts from this blog

வினாயகர்

முன்னுறை