Posts

Showing posts from July, 2017

மாரியம்மா-மாறியம்மா

Image
ஆடி மாதம் பிறக்கிறது அதனால் நாம் மாரியம்மனின் தத்துவம் அறிவோம். நம் ஆன்மீகத்தை திருடியவர்களின் புனைவு கதைகளை கேட்டால் நகைப்பு வரும். பரசுராமர் தன் தந்தை சொல் கேட்டு தன் தாயின் தலையை வெட்டிய தாகவும் பிறகு தந்தையிடமே தாயை உயிர்ப்பிக்க வரம் கேட்டதாகவும் அவருடைய அறிவுறுத்தலின் பேரில் தாயை உயிர்ப்பிக்க முயற்சிக்கையில் தாயின் தலையை வேறு உடலுடன் மாற்றி உயிர்பித்ததாகவும் தலையை மாற்றியதால் அவரை "மாறியம்மாவாக" தெய்வமாக கும்பிடுவதாகவும் தொடரும் முட்டாள்களின் கதை. மாரி, மாறி என்ற வார்த்தைகளில் குழம்பி தவறாய் புனையப்பட்ட கதையை விடுங்கள். உண்மையை ஆய்வோம். மாரி+அம்மா = மாரியம்மா மாரி என்றால் மழை.  மழைக்கான கடவுள் மாரியம்மா. மழைக்கான தெய்வம் மாரியம்மன் என்பதாலேயே ஆடி மாதத்தில் அம்மனை வேண்டி ஆடியை தொடர்ந்து வரும் மாதங்களில் மழை நன்றாக பொழியவேண்டி விவசாயத்துக்கான முன்னேற்பாடுகளை விவசாயிகள் துவங்குகிறார்கள். வெயில் உச்சத்தை தொடும் மாதங்களில் அம்மனுக்கு விழா எடுப்பித்து, விழாவின் அங்கமாக ஊரே ஒன்று கூடி கூழ், நீர், மோர், பானகம் முதலிய சூட்டை தணிக்கும் உணவுகளை அம்மனுக்கு பிடித்த ...