Posts

Showing posts from January, 2017

வினாயகர்

Image
பிள்ளையார், கணபதி முதலான பல பெயர்களில் அழைக்கப்படும் தெய்வம் யானை முகம் கொண்ட நம் வினாயகர். அவரை சிவன் பார்வதி தம்பதிகளின் மூத்த மகன் என்றும், ஞானத்திற்க்கான கடவுள் என்றும் நம் சைவ மதத்தில் சொல்வது மரபு. யாராக இருந்தாலும் ஏன் சிவனாகவே இருந்தாலும் முதலில் பிள்ளையாரை கும்பிடாமல் அவருக்கு மரியாதை செய்யாமல் எந்த செயலையும் செய்ய கூடாது என்பது சைவ மதத்தில் பின்பற்றப்படும் வழக்கம். உன்மையில் யானை உருவத்தில் நம் மூதாதேயர்கள் உருவகப்படுத்தியது எதை தெரியுமா?  ஞானத்தை.  ஆம் பிள்ளையார் என்பவர் ஞானத்திற்க்கான கடவுள் என்றால் ஞானம்தான் பிள்ளையார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஞானம் அடைந்தவர்கள் தன் முழுபலத்தையும் தன்னுள்ளே அடக்கி அமைதியாக இருப்பார்கள் என்பதை குறிக்கவே யானையை ஞானத்திற்க்கான கடவுளாக உருவகப்படுத்தி உள்ளனர். சின்னஞ்சிறு மூஞ்சுருவை அவருக்கு வாகனமாக வைத்திருப்பது ஒரு முரண்பாடகவே தோன்றும்.  ஞானம் அடைந்த ஒருவரால் எந்த சூழ்நிலையிலும் எதை வேண்டுமானாலும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை காட்டவே அத்தகைய ஒரு உருவகத்தை செய்துள்ளனர் நம் பெரியோர். ...

முன்னுறை

நம் மூதாதேயர்கள் எதையும் கண்மூடித்தனமாக சொல்லி சென்றதில்லை அதே வேளையில் அனைத்தையும் நேரடியாகவும் சொல்லி செல்லவில்லை.  அவர்கள் நமக்கு விட்டு சென்ற நடைமுறைகளின் மறைபொருள் தெரிந்தால் நாம் இன்று சம்பிரதாயமாக செய்யும் சடங்குகளின் அறிவியல் புரியும். பல 1000 வருடங்களுக்கு முன்பே சூரிய குடும்பத்தின் கோள்களையும், அவற்றின் இயக்கத்தையும், தன்மைகளையும் பற்றி தீர்க்கமாக சொன்ன நம் தமிழ் முன்னோர்கள் கண்டிப்பாக சடங்கிற்காகவோ, சம்பிரதாயமாக வோ, அல்லது தவறாகவோ எதையும் சொல்லியிருக்க மாட்டார்கள். அப்படி எனில் அவர்கள் சொல்லி சென்ற ஆன்மீகம் நடைமுறைகளின் மறைபொருள் என்ன? அவற்றின் பின்னனியில் உள்ள மெய்பொருள் என்ன? மிக சிறந்த அறிவியல் அறிஞர்களாக இருந்த அவர்கள் நமக்கு தவறான பாதை போட்டு சென்றிருப்பார்களா? சிந்திப்போம்.... மார்கழியில் கோலம் போடு நெற்றியிலே பட்டை போடு தோப்பு கரணம் போடு அமாவாசை, பௌர்ணமியில் வயிற்றை காலியாய் போடு... என அவர்கள் சொன்ன எல்லாமே அறிவியல் சிவனுக்கு மூன்று கண் பெருமாளுக்கு பாற்கடல் பிரமனுக்கு நாளுதலை... என அவர்கள் சொன்ன எல்லாமே அறிவியல் இடையில் வந்த ஆரியரிடம் தொலை...