முன்னுறை

நம் மூதாதேயர்கள் எதையும் கண்மூடித்தனமாக சொல்லி சென்றதில்லை அதே வேளையில் அனைத்தையும் நேரடியாகவும் சொல்லி செல்லவில்லை.  அவர்கள் நமக்கு விட்டு சென்ற நடைமுறைகளின் மறைபொருள் தெரிந்தால் நாம் இன்று சம்பிரதாயமாக செய்யும் சடங்குகளின் அறிவியல் புரியும்.
பல 1000 வருடங்களுக்கு முன்பே சூரிய குடும்பத்தின் கோள்களையும், அவற்றின் இயக்கத்தையும், தன்மைகளையும் பற்றி தீர்க்கமாக சொன்ன நம் தமிழ் முன்னோர்கள் கண்டிப்பாக சடங்கிற்காகவோ, சம்பிரதாயமாக வோ, அல்லது தவறாகவோ எதையும் சொல்லியிருக்க மாட்டார்கள்.
அப்படி எனில் அவர்கள் சொல்லி சென்ற ஆன்மீகம் நடைமுறைகளின் மறைபொருள் என்ன? அவற்றின் பின்னனியில் உள்ள மெய்பொருள் என்ன? மிக சிறந்த அறிவியல் அறிஞர்களாக இருந்த அவர்கள் நமக்கு தவறான பாதை போட்டு சென்றிருப்பார்களா?
சிந்திப்போம்....
மார்கழியில் கோலம் போடு
நெற்றியிலே பட்டை போடு
தோப்பு கரணம் போடு
அமாவாசை, பௌர்ணமியில்
வயிற்றை காலியாய் போடு...
என அவர்கள் சொன்ன எல்லாமே அறிவியல்
சிவனுக்கு மூன்று கண்
பெருமாளுக்கு பாற்கடல்
பிரமனுக்கு நாளுதலை...
என அவர்கள் சொன்ன எல்லாமே அறிவியல்
இடையில் வந்த ஆரியரிடம் தொலைத்த நம் ஆன்மீக அறிவியலை மீட்டெடுப்போம்...
ஆரியர்கள் அதில் கலந்த நஞ்சதனை பிரித்தெடுப்போம்...
பகுத்தறிவோம் ஆன்மீக அறிவியலை.
தொடரும்...

Comments

  1. அருமை... அருமை...

    நமது திரட்டியில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வினாயகர்

பிரம்மம் அறிவோம்